CRIME
“எப்போதும் போன் தானா..?” மகளின் போனை பிடுங்கி உடைத்த தந்தை… குக்கர் மூடியால் தந்தையை அடித்தே கொன்ற மகள்… நடுநடுங்கவைக்கும் சம்பவம்..!!
குஜராத் மாநிலத்தில், எப்போதும் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகளைத் தந்தை கண்டித்து அவரது போனை உடைத்ததால், ஆத்திரமடைந்த மகள் தந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சூரத் நகரின் கோசாட் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் சவுகான் (55) என்பவரின் மகள் காஜல் (22), வீட்டு வேலைகள் எதையும் செய்யாமல் எப்போதும் செல்போனிலேயே மூழ்கியிருந்துள்ளார். இது குறித்து ரமேஷின் மனைவி மஞ்சுளா அவரிடம் புகாரளித்துள்ளார்.
போனை உடைத்ததால் ஆத்திரமடைந்த காஜல் குக்கர் மூடி மற்றும் கத்தியால் தந்தையைத் தாக்கி கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் காஜலைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
