“அய்யோ கொடுமையே…” காலையிலேயே கேட்ட அலறல் சத்தம்.. மனைவியை நாற்காலியில் கட்டி வச்சு பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்.. சந்தேகத்தால் அரங்கேறிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ கொடுமையே…” காலையிலேயே கேட்ட அலறல் சத்தம்.. மனைவியை நாற்காலியில் கட்டி வச்சு பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்.. சந்தேகத்தால் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கண்ணோஜ் மாவட்டம், சிப்பரமௌ காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜகத்பூர் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தகாத உறவு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன், தனது மனைவியை நாற்காலியில் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொடூரமாகக் கொன்றுள்ளான். சோனம் (வயது 30) என்ற அந்தப் பெண் இந்தத் தீ விபத்தில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சுச்பீர் சிங் என்ற மோனு என்பவருக்கும் சோனமுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. சுச்பீர் ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், சுமார் 15 நாட்களுக்கு முன்புதான் கிராமத்திற்குத் திரும்பியுள்ளார். சோனமிற்கும் உள்ளூர் இளைஞர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த கணவன், அவர் தொலைபேசியில் பேசியதைக் கண்டறிந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களாகத் தம்பதியினரிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

சம்பவத்தன்று காலை சுமார் 7 மணியளவில் சுச்பீர் தனது மனைவியை நாற்காலியில் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் தீயணைப்புப் படையினருக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்ட நிலையில், சோனமின் எஞ்சிய உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட சுச்பீர் தம்பதியினரின் இரண்டு குழந்தைகளுடன் தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in