LATEST NEWS
யாருமா நீ.. லட்சுமி தேவியை வரவழைக்க போய் எமதர்மன் வரப்போறார்… தீபாவளி கிளீனிங்கில் எல்லைய மீறிய பெண்… வீடியோவை பார்த்து அலறும் நெட்டிசன்கள்..!!
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் தீவிரமாகச் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன. வீட்டின் ஒவ்வொரு மூலையையும் பளபளப்பாக்குவதிலும், பழைய பொருட்களை வெளியேற்றுவதிலும் மக்கள் காட்டும் ஆர்வம் மற்றும் உற்சாகம் சமூக வலைதளங்களில் பலவிதமான காட்சிகளாக வைரலாகி வருகின்றன. ஆனால், சில சமயங்களில் இந்தச் சுத்தம் செய்யும் வெறி மனிதர்களுக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த வைரல் வீடியோவில், ஒரு பெண் தீபாவளித் தயாரிப்புக்காக வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் வீட்டின் உள்ளே வழக்கம் போலத் துடைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், சிறிது நேரத்தில் அவர் எல்லாவற்றையும் மீறி ஒரு விபரீதமான செயலில் இறங்குகிறார். வீட்டின் ஜன்னல் மற்றும் பால்கனி பகுதிக்குச் செல்லும் அவர், அங்கிருந்து எவ்விதப் பாதுகாப்பும் இன்றி வெளிப்பக்கமாக ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டு சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்குகிறார்.
எந்தவித பாதுகாப்பு பெல்ட்டோ அல்லது மாற்று ஏற்பாடுகளோ இல்லாமல் ஜன்னலின் வெளிப்பகுதியில் நின்று அவர் செய்யும் இந்த சாகசச் செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த ஆபத்தான வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியையும் நகைச்சுவையான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக ஒரு பயனர், “லட்சுமி தேவியைக் குஷிப்படுத்துகிறேன் பேர்வழி என்று எமதர்மராஜாவே வீட்டிற்கு வந்துவிடப் போகிறார்” என்று கிண்டலாகக் கமெண்ட் செய்துள்ளார்.
