“அடப்பாவி.. கைது செய்து கூட்டிட்டு வந்தா…” போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே காவலருக்கு ‘ஆப்பு’ வைத்த இளம் குற்றவாளி.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவி.. கைது செய்து கூட்டிட்டு வந்தா…” போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே காவலருக்கு ‘ஆப்பு’ வைத்த இளம் குற்றவாளி.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

சென்னை வானகரம் அருகே தனியார் நிறுவன ஊழியரைக் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது இளம் குற்றவாளி வியாழக்கிழமை மாலை போலீஸ் வாகனத்திலிருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு முகப்பேரைச் சேர்ந்த மதன்குமார் (27) என்பவர் தாம்பரம் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த விக்னேஷ் (20) மற்றும் இந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் அவருக்கு வழி காட்டுவது போல நடித்து, தாம்பரத்தில் விடுவதாகக் கூறி தங்களது வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ஆனால், வானகரம் அடையாளம்பட்டு அருகே சென்றபோது வண்டியை நிறுத்தி, மதன்குமாரைத் தாக்கி அவரிடமிருந்த மொபைல் போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

பாதிக்கப்பட்ட மதன்குமார் அளித்த புகாரின் பேரில், வானகரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி விக்னேஷ் மற்றும் அந்த 17 வயது சிறுவனை வெவ்வேறு இடங்களில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். வியாழக்கிழமை மாலை இருவரையும் போலீஸ் வாகனத்தில் வானகரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது, விக்னேஷைக் காவல் நிலையத்திற்குள் கூட்டிச் சென்ற சமயம் பார்த்து, சிறுவன் தப்பியோடியுள்ளான். வாகனத்தில் தனக்குக் காவலுக்கு இருந்த காவலரைத் திடீரென பலமாகத் தள்ளிவிட்டு, மின்னல் வேகத்தில் ஓடித் தப்பிய அந்த இளம் குற்றவாளியைத் தேடக் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in