இன்ஸ்டாகிராம் காதலின் கொடூர முகம்.. 15 வயது சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்த கொடூரன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை..!! – cinefeeds
Connect with us

CRIME

இன்ஸ்டாகிராம் காதலின் கொடூர முகம்.. 15 வயது சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்த கொடூரன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை..!!

Published

on

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம், மைனர் பெண் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூலைச் சேர்ந்த சந்தகல்லி நாயுடு என்ற நபர், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் வழியாக வாரங்கலைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பின்னர், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று அச்சிறுமியைக் கட்டாயப்படுத்தி ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், நெக்கோண்டா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, வாரங்கல் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி க்ஷமா தேஷ்பாண்டே, குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in