CINEMA
வழிதெரியாமல் கூட அரசியல் பக்கம் போகவே மாட்டேன்.. ஏன் தெரியுமா..? திட்டவட்டமாக அறிவித்த நடிகர் சூர்யா..!!
நடிகர் சூர்யா அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில், தான் ஒருபோதும் அரசியல் பக்கமே போகமாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வழிதெரியாமல் கூட தம்மால் அரசியல் களத்திற்குள் நுழைய முடியாது என்று கூறியுள்ள அவர், தமக்குத் திரையுலகிலும் சமூகத்திலும் ஒரு நல்ல இடத்தையும் அடையாளத்தையும் கொடுத்த மக்களுக்கு, தன்னால் முடிந்த நன்மைகளைத் திரும்பக் செய்யவே விரும்புவதாகத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ஆசைகளுக்குப் பின்னால் ஓடுவதை விட, தனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் திருப்தி அளிக்கக்கூடிய நல்ல விஷயங்களைத் தொடர்ந்து செய்வதிலேயே கவனம் செலுத்த விரும்புவதாக சூர்யா தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அவரது அரசியல் வருகை குறித்துக் கிளம்பிய பல்வேறு ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், தங்களது ‘அகரம் ஃபவுண்டேஷன்’ உள்ளிட்ட அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூகப் பணிகள் குறித்துப் பேசிய அவர், “நாங்கள் செய்துகொண்டிருக்கும் பணிகளை ஒருபோதும் சேவை என்று சொல்ல மாட்டேன்; அது எங்களின் சமூகப் பொறுப்பு” என்று கூறியுள்ளார். தங்களின் இந்த நற்பணிகளுக்குப் பின்னால் எவ்வித அரசியல் நோக்கமும் சுயலாபமும் இல்லை என்பதையும் அவர் மிக உறுதியாக அநேர்காணலில் பதிவு செய்துள்ளார்.
