LATEST NEWS
பகீர்..! எம்எல்ஏ ஓய்வறையில் இளம்ஜோடி உல்லாசம்… டெல்லியில் இருந்து திரும்பிய எம்எல்ஏ-வுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பெரும் பரபரப்பு..!!
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் ஓய்வறையில் இளம்ஜோடி ஒன்று அத்துமீறி நுழைந்து நெருக்கமாக இருந்த சம்பவம் அம்மாநில அரசியலிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிப்பூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் ஜெயின் தமக்கு ஒதுக்கப்பட்ட ஓய்வறைக்குத் திரும்பிய போது இந்த அதிர்ச்சிகரமான விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பவத்தன்று டெல்லி பயணத்தை முடித்துவிட்டு எம்எல்ஏ தினேஷ் ஜெயின் தனது ஓய்வறைக்குத் திரும்பியுள்ளார். அவர் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, அங்கு ஓர் இளம்ஜோடி அத்துமீறி நுழைந்து, மிகவும் நெருக்கமான நிலையில் உல்லாசமாக இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். எம்எல்ஏவைக் கண்டதும் அந்த ஜோடி அங்கிருந்து பதற்றத்துடன் அவசரமாக தப்பியோடியுள்ளது.
உயர்ந்த பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினரின் தங்கும் அறைக்குள், அடையாளம் தெரியாத நபர்கள் எவ்வாறு நுழைந்தார்கள் என்ற கேள்வி பாதுகாப்பு குறைபாட்டை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பூட்டப்பட்ட அறைக்குள் புகுந்த அந்த இளம்ஜோடி யார், அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
