LATEST NEWS
“சீன பெண் உளவாளியுடன் கள்ளத்தொடர்பு…”அமெரிக்க ரகசியங்களை விற்றாரா 63 வயது என்விடியா CEO..? அதிரடியில் இறங்கிய FBI..!!
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான 63 வயது ஜென்சன் ஹூவாங், தனது நிறுவனத்தின் முக்கிய தகவல்களை சீன உளவாளி பெண் ஒருவரிடம் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜென்சன் ஹூவாங், கிறிஸ் மலாச்சோவ்ஸ்கி மற்றும் கர்டிஸ் ப்ரீம் ஆகியோர் இணைந்து என்விடியா என்ற பன்னாட்டு நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனமானது, வீடியோ கேம்களுக்கான நவீன கிராபிக்ஸ் செயலாக்க அலகை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதோடு, கணினிக்கு தேவையான வன்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவைகளை வழங்கி வருகிறது. என்விடியா நிறுவனம் தயாரித்து வரும் அதிநவீன குறைகடத்தி தொழில்நுட்பங்கள், சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா கட்டுப்படுத்தி உத்தரவிட்டது. இதன்மூலம் என்விடியா தயாரித்து வரும் மேம்பட்ட செயலிகள், சீனாவிற்கு கிடைப்பதை அமெரிக்கா தடுத்தது.
இதற்கிடையில் சீனாவை சேர்ந்த ஆலிஸ் ஹூவாங்கு என்ற இளம்பெண்ணுடன், என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹூவாங்கிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீன உளவாளியான ஆலிஸ், தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து ரகசியமாக மென்பொருள் தகவல்களை சேகரித்து, அதனை சீனாவிற்கு அனுப்பி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து என்விடியா நிறுவனத்தின் தகவல்கள் ரகசியமாக சீனாவிற்கு செல்வதை, அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தது.
இதைத்தொடர்ந்து என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, தனது மனைவிக்கு தான் துரோகம் செய்துவிட்டதாகவும், தனது செயல்கள் என் மனைவியையும், எங்கள் குழந்தைகளையும் காயப்படுத்தி விட்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தான் செய்த செயலுக்கு மிகவும் வருந்துவதாகவும், தான் செய்ததில் எந்த நியாயமும் இல்லை என்று ஜென்சன் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஜென்சன் மற்றும் அவரது தலைமை குழுவின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாக என்விடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜென்சன் மீது ஒரு சுதந்திரமான விசாரணை தொடங்க இருப்பதாகவும் என்விடியா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
