CRIME
தீபாவளி பட்டாசு சண்டையில் பயங்கரம்.. நடுரோட்டில் கத்திகளுடன் மோதிக்கொண்ட இருதரப்பு.. 3 பேருக்கு நேர்ந்த விபரீதம்.. திடுக்கிடும்சம்பவம்..!!
ஹைதராபாத் பேகம் பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தீபாவளி பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு பயங்கர வன்முறையாக மாறியுள்ளது. காந்தி பவன் மற்றும் படேல் நகர் ஆகிய பகுதிகளில் பட்டாசு வெட்டியபோது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இந்தச் சண்டை படிப்படியாக முற்றி, இரு தரப்பினரும் கத்திகளால் பரஸ்பரம் ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்டனர்.
இந்தக் கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர். சம்பவ இடத்திலிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாகப் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் காந்தி பவன் மற்றும் படேல் நகர் பகுதிகளில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த பேகம் பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
