CRIME
“அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தோம், அதற்குள்..” பட்டாசு வெடித்த12 வயது சிறுவனை பாய்ந்து வந்து கவ்விச் சென்ற கொடூர சிறுத்தை.. புதருக்குள் காத்திருந்த கோர காட்சி கதறும் பெற்றோர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் உள்ள ஜமுனாபாத் பண்ணையில், தீபாவளி பண்டிகை அன்று மாலை 12 வயது சிறுவன் ரோஹித் தன் வீட்டு முற்றத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தான். அப்போது, அருகில் உள்ள கரும்பு ஆராய்ச்சி மையத்தின் எல்லையைத் தாண்டி திடீரென முற்றத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, சிறுவனைத் தன் வாயால் கவ்விக்கொண்டு கரும்புத் தோட்டத்திற்குள் ஓடியது. சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த தாயும் தந்தையும் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து, கிராம மக்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இன்று காலையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய தீவிரத் தேடுதலில், வீட்டின் அருகிலிருந்த புதருக்குள் சிறுவனின் சடலம் மூன்று துண்டுகளாக, தலை மற்றும் கால்கள் பகுதிகள் சிறுத்தையால் ஓரளவு உண்ணப்பட்ட நிலையில் கொடூரமாகக் கண்டெடுக்கப்பட்டது.
ஐந்தாம் வகுப்பு படித்து வந்த ரோஹித், அவனது பெற்றோருக்கு ஒரே ஒரு மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகை நாளில் நடந்த இந்த கொடூர சம்பவத்தால் அந்த குடும்பமே நிலைகுலைந்து சோகத்தில் மூழ்கியுள்ளது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கோலா காவல் எல்லைக்குட்பட்ட அந்த கிராம மக்கள் கடும் அச்சத்திலும் ஆத்திரத்திலும் உள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறுவனைக் கொன்ற அந்த சிறுத்தையை உடனடியாகக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்குக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
