“இன்னும் 3 கிலோமீட்டர் தான்.. ஆனா..” ஆற்றுக்குள் பாய்ந்த கார்.. பிரபல பத்திரிகையாளர் குடும்பத்தோடு பலி.. தீபாவளி கொண்டாட்டம் தீராத சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இன்னும் 3 கிலோமீட்டர் தான்.. ஆனா..” ஆற்றுக்குள் பாய்ந்த கார்.. பிரபல பத்திரிகையாளர் குடும்பத்தோடு பலி.. தீபாவளி கொண்டாட்டம் தீராத சோகம்..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் கரியபந்த் மாவட்டத்தில் உள்ள ராஜீம் திலா அணைக்கட்டு அருகே நேர்ந்த ஒரு கொடூர சாலை விபத்தில், பிரபல பத்திரிகையாளர் ஷீத்தல் சாஹு உட்பட அவரது குடும்பத்தினர் நான்கு பேரும் ஆற்றுக்குள் மூழ்கி துயரமான முறையில் உயிரிழந்தனர். தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியைக் கொண்டாடிவிட்டு, இவர்கள் அனைவரும் ராய்ப்பூரிலிருந்து தங்களது சொந்தக் கிராமத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ராஜீம் அணைக்கட்டுப் பாதையில் சென்றபோது கார் எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் பாய்ந்தோடும் மகாநதி ஆற்றுக்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்தத் துயரமான விபத்தில் பத்திரிகையாளர் ஷீத்தல் சாஹு, அவரது மனைவி, இவர்களது 21 வயது மகள் மற்றும் 19 வயது மகன் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பலியாகினர். ஒட்டுமொத்தக் குடும்பமும் இந்த விபத்தில் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தங்களது சொந்த வீட்டை அடைய இன்னும் வெறும் 3 கிலோமீட்டர் தூரமே இருந்த நிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் ஆற்றில் மூழ்கிய காரையும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in