தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருடப்பட்டது எப்படி..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருடப்பட்டது எப்படி..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

Published

on

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.22.10 கோடி ஆன்லைன் மூலமாக மோசடி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசின் பணப்பரிவர்த்தனைகளுக்காகத் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி இணைந்து பிரத்யேக இணையதள போர்ட்டல் ஒன்றை உருவாக்கியிருந்தன. இந்த போர்ட்டல் தொடர்பான அதிகாரப்பூர்வ ஜிமெயில் (Gmail) முகவரிக்கு மர்ம நபர்கள் சில போலி லிங்குகளை (Phishing links) அனுப்பி, அதன் மூலம் கணக்குகளை ஊடுருவி இக்கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இந்த டிஜிட்டல் மோசடியானது மண்டபம் (ரூ.14 கோடி), நாகப்பட்டினம் (ரூ.3.10 கோடி), தாராபுரம் (ரூ.5 கோடி) ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டு இணையக் குற்ற கும்பல் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், போர்ட்டலை வடிவமைத்த தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in