LATEST NEWS
நடுவானில் திக் திக் நிமிடங்கள்..! 150 அடி உயர மின்சாரக் கம்பியில் சிக்கிய பாராகிளைடர் பைலட்.. : பாராகிளைடிங்கின் போது நேரிட்ட கொடூரம்..!!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள மண்டி-பதான்கோட் நெடுஞ்சாலையில், பாராகிளைடிங் விளையாட்டின் போது நேரிட்ட விபத்தில் பைலட் ஒருவர் 150 அடி உயரத்தில் உள்ள அதிஉயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காற்றில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவரது பாராகிளைடர் மின் கம்பிகளில் சிக்கியதால் அவர் நடுவானில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போதிலும், மிக அதிக உயரம் மற்றும் மின்சாரக் கம்பிகள் என்பதால் பைலட்டைப் பத்திரமாக மீட்பதில் பெரும் சவாலும் ஆபத்தும் நீடித்து வருகிறது.
ஒருவேளை பைலட் மேலிருந்து கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க, மீட்புக் குழுவினர் தரையில் தடிமனான மெத்தைகள், வலைகள் மற்றும் தார்பாய்களை விரித்து முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர். மின்சார இணைப்பைத் துண்டித்துவிட்டு பைலட்டை எந்தவித காயமுமின்றி பத்திரமாக மீட்பதற்கான தீவிர மீட்பு நடவடிக்கைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
