எல்லாம் டெக்னாலஜி சாமி..! கோவில் வாசலில் திருடு போன அப்பாவின் செருப்பு… 10 நிமிடத்தில் டெலிவரி ஆப் செய்த அதிசயம்.. இணையத்தை கலக்கும் பதிவு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எல்லாம் டெக்னாலஜி சாமி..! கோவில் வாசலில் திருடு போன அப்பாவின் செருப்பு… 10 நிமிடத்தில் டெலிவரி ஆப் செய்த அதிசயம்.. இணையத்தை கலக்கும் பதிவு..!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் விருந்தாவனில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலுக்குச் சென்ற தொழிலதிபர் சந்தீப் மாலின் தந்தையுடைய செருப்பு திருடு போன நிலையில், அடுத்த 10 நிமிடங்களில் ‘குயிக் காமர்ஸ்’ செயலி மூலம் கோவில் வாசலிலேயே புதிய செருப்பு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. உலகின் வேறு எந்த மூலையிலும் இப்படியொரு அதிவேகச் சேவையைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என சந்தீப் மால் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வேகமாக வளர்ந்து வரும் நவீன இந்தியாவும், வறுமையின் பிடியில் இருக்கும் பழைய இந்தியாவும் ஒரே புள்ளியில் சந்திக்கும் தருணம் இது என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். ஒருபுறம் வழிபாட்டுத் தலங்களில் செருப்பு திருடு போகும் பழைய வழக்கம் தொடர்ந்தாலும், மறுபுறம் விரைவு விநியோகத் துறையில் இந்தியா உலகிற்கே முன்னோடியாக உருவெடுத்துப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in