CRIME
“அம்மா-அப்பா பஸ்ஸில் இருக்காங்க” பெங்களூருவில் 7 பேரை கொன்றுவிட்டு… பிஞ்சுக் குழந்தைகளை வைத்தே உறவினர்களை ஏமாற்றிய சைக்கோ கொலையாளியின் பகீர் ஆடியோ…!!
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி பயன்படுத்திய ஷாக்கிங் முறைகள் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இப்படுகொலைகளை அரங்கேற்றிய குற்றவாளி இந்துசேகர், உறவினர்களுக்கு எந்தவித சந்தேகமும் வராத வகையில் அவர்களை ஏமாற்ற உயிரிழந்தவர்களின் பிஞ்சுக் குழந்தைகளைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெற்றோரைத் தேடி போன் செய்யும் உறவினர்களிடம், குழந்தைகள் மூலம் “அவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர், மூன்று மாதங்கள் கழித்துத்தான் திரும்புவார்கள்” என்று குற்றவாளி பொய்யாகப் பேச வைத்து நாடகமாடியுள்ளான்.
இந்த வழக்கில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கொல்லப்பட்ட நளியின் தாயும், உறவினர்களும் அழுதுகொண்டே சிறுவன் யதினியிடம் தனது மகளுடன் ஒருமுறை பேசும்படி கெஞ்சுவதும், அதற்கு அந்தச் சிறுவன் குற்றவாளியின் மிரட்டலுக்குப் பயந்து கொண்டு “அம்மா-அப்பா பஸ்ஸில் இருக்கிறார்கள், எங்களுடன் சுற்றுலா செல்கிறார்கள்” என்று கூறி போனைத் துண்டிப்பதும் பதிவாகியுள்ளது. கொலை செய்த பிறகும் கூட, தனது கொடூரத் திட்டத்தை மறைப்பதற்காக அந்த அப்பாவிச் சிறார்களைக் கையாண்டு உறவினர்களை நம்ப வைத்த விதம், குற்றவாளியின் சைக்கோ மனநிலையை வெளிக்காட்டுகிறது.
தங்கள் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டதாக நம்பிய அந்தப் பாவி, ரகசியம் வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதற்காகப் பிற்காலத்தில் அந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளையும் சேர்த்து கொடூரமாகப் படுகொலை செய்துள்ளான். தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வழங்கிய இந்த அதிர்ச்சி தரும் ஆடியோ ஆதாரங்களை காவல்துறையும், தடயவியல் நிபுணர்களும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மனிதத்தன்மையற்ற இந்தத் திடுக்கிடும் கொலை வழக்கு பெங்களூரு மக்களிடையே பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
