LATEST NEWS
“கலெக்டரே புகார் கூறாதபோது கனிமொழி எதற்காக ட்வீட் செய்தார்?” அப்போ உங்களை சொன்னா ஏத்துப்பீங்களா..? அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் திமுக எம்.பி. கனிமொழி சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியிருந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரே இதுவரை எந்தப் புகாரும் அளிக்காத நிலையில், கனிமொழி எதற்காக இது குறித்து ட்வீட் செய்தார் எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கனிமொழி கூறியது போல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவிய உறுதிப்படுத்தப்படாத வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு அவர் பதிவிட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு ஆதாரமற்ற தகவல்களைப் பகிர்வது கண்டிக்கத்தக்கது எனவும் விமர்சித்துள்ளார்.
இத்தகைய தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பிம்பத்தை உருவாக்கவும், பொதுமக்களிடையே அரசு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தவும் திமுக முயற்சிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கனிமொழியைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை வைத்து நாங்கள் கருத்துக் கூறினால் அதை அவர் ஏற்றுக்கொள்வாரா எனவும் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
