“தொழிலுக்கே போக முடியாது பாத்துக்கோங்க” நரிக்குறவர் மக்களை கொத்தடிமைகள் போலத் தரையில் அமர வைத்து கம்பால் மிரட்ல் ..? போலீஸ் மிரட்டும் வீடியோவால் வெடித்த சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தொழிலுக்கே போக முடியாது பாத்துக்கோங்க” நரிக்குறவர் மக்களை கொத்தடிமைகள் போலத் தரையில் அமர வைத்து கம்பால் மிரட்ல் ..? போலீஸ் மிரட்டும் வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமம் ராஜகோபால் நகரில் அமைந்துள்ள நரிக்குறவர் காலனியில், தீபாவளி அன்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரைக் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானுமாமலை தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது நரிக்குறவர் மக்களை கொத்தடிமைகளைப் போலத் தரையில் அமர வைத்து, கையில் கம்பைக் காட்டி மிரட்டியும், தாக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Advertisement

மேலும், உடன் சென்ற உதவி ஆய்வாளர் நீலகண்டன், “நீங்கள் தொழிலுக்குச் செல்ல முடியாது, வாகனங்களை அடித்து நொறுக்கிவிடுவோம்” என்று பொதுமக்களை மிரட்டியதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, மற்றொரு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இதே காவல் நிலைய ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம் விதித்திருந்த நிலையில், தற்போது நரிக்குறவர் காலனி மக்களிடம் போலீசார் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட இந்த வீடியோ சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in