பட்டப்பகலில் நடந்த கோரச் சம்பவம்.. வாயில் துணியைத் திணித்து தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

பட்டப்பகலில் நடந்த கோரச் சம்பவம்.. வாயில் துணியைத் திணித்து தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

ஹைதராபாத் மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ரெசிடென்சி குடியிருப்பில் வசித்து வந்த மத்திய அரசு ஊழியர் அருண் குமாரின் மனைவி அனிதா (35) மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்குள் புகுந்த கொலையாளிகள், அவரது வாயில் துணியைத் திணித்து, கால்களைக் கட்டிப் போட்டு இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகள், தங்களது தாய் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகத் தந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீர்பேட்டை காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in