LATEST NEWS
எல்லாம் முடிஞ்சிபோச்சா..? பிரியாணி ஆசையில் பசியோடு இருக்கும் சீமான்… சைலண்டாக செக் வைத்த ஸ்டாலின்… அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திடீர் ட்விஸ்ட்..!!
வரும் காலங்களில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும், தன்னை திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் பொதுவேட்பாளராக அறிவித்து ஆதரவளித்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்றும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
பசியோடு இருப்பவனுக்குப் பிரியாணி கிடைத்தால் வேண்டாம் எனச் சொல்வானா என்று தனது நிலைப்பாட்டை நகைச்சுவையாகவும் ஆச்சரியப்படும் வகையிலும் சீமான் குறிப்பிட்டது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இந்த விவக குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், “தேர்தல் அறிவிக்கட்டும், அதன்பிறகு பேசலாம்” என்று கூறி உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் காலம் தாழ்த்தும் வகையில் பதிலளித்தார்.
இருப்பினும், சீமானின் இந்த பொதுவேட்பாளர் கோரிக்கையானது எதிர்காலத்தில் திமுகவின் வாக்கு வங்கி மற்றும் அரசியல் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், திமுக தலைமை அவருக்கு மறைமுகமாக முட்டுக்கட்டை போடத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
