“அப்பா வீட்டிற்கு வராதீங்க..” 9 வயது மகள் கொடுத்த எச்சரிக்கை… மனைவியின் சதித்திட்டத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அப்பா வீட்டிற்கு வராதீங்க..” 9 வயது மகள் கொடுத்த எச்சரிக்கை… மனைவியின் சதித்திட்டத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தீபாவளிப் பண்டிகையன்று பவன் சோனி என்பவர் தனது மனைவி வர்ஷாவைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, பவனின் 9 வயது மகள் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “அப்பா வீட்டிற்கு வராதீர்கள், அவர்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள்” என்று அச்சத்துடன் எச்சரித்துள்ளார். மேலும், வர்ஷாவும் 24 வயதான வெல்டர் பைசான் அலி என்பவரும் சேர்ந்து பவன் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் 18 மணி நேர ஆடியோ பதிவைக் கேட்டுத் தானும் மிகுந்த பயத்தில் இருந்ததாகப் பவனின் மகன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைச் சதியின் அச்சம் மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் காரணமாகவே, தீபாவளி அன்று பவன் சோனி தனது மனைவியைத் தீர்த்துக்கட்டிவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், வர்ஷாவுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் 24 வயதான பைசான் அலியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in