CRIME
112-க்கு வந்த ஒரு அழைப்பு!.. வீட்டிற்குள் பூட்டிக்கொண்டு நபர் எடுத்த விபரீத முடிவு.. மின்னல் வேகத்தில் வந்து காவலர்கள் செய்த காரியம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
மேடக் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சந்தோஷ் என்ற நபரை, காவல்துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளனர். குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளான சந்தோஷ், வீட்டிற்குள் தன்னைத்தானே பூட்டிக்கொண்டு சேலையால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து அவசர உதவி எண்ணான 112-க்குத் தகவல் கிடைத்தவுடன், காவல்துறையினர் சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு சென்ற காவலர் ரமேஷ் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மைசய்யா ஆகியோர் உடனடியாகச் செயல்பட்டு, சந்தோஷ் தூக்கிடப் பயன்படுத்திய சேலையை அறுத்து அவரைக் கீழே இறக்கினர். அதனைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக உரிய மருத்துவச் சிகிச்சை கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்தனர். தக்க சமயத்தில் விரைந்து வந்து ஒரு உயிரைக் காப்பாற்றிய காவல்துறையினரின் துரித நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
