CRIME
காதல் மனைவியின் படிப்புக்காக ரூ.45 லட்சம் கடன்.. வேலை போனதும் நகைக்கடையில் ரூ.37 லட்சம் சுருட்டி எஸ்கேப்… ஆனால் ஒரே ஒரு தவறால் சிக்கிய கணவன்..!!
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள வைஷாலி நகரில் அமைந்துள்ள ‘சீரிஸ் ஜுவல்ஸ்’ நகைக்கடையில் புகுந்து 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த திக்விஜய் சிங் என்பவரை டெல்லி துவாரகாவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முகமூடி மற்றும் மஞ்சள் நிறத் தொப்பி அணிந்து கடைக்குள் நுழைந்த அவர், கத்தியைக் காட்டி ஊழியர்களை மிரட்டி வைரங்கள் மற்றும் தங்க நகைகளைப் பையில் நிரப்பித் தப்பியோடியதுடன், காவல்துறையினரைத் திசைதிருப்ப ஆடைகளை மாற்றிக்கொண்டு டெல்லிக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தன்னைப் போலவே தனது மனைவியையும் இங்கிலாந்தில் படிக்க வைப்பதற்காக 30 லட்சம் ரூபாய் கல்விக் கடனும், 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடனும் வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். வேலையை இழந்த பிறகு மொத்தமாக 45 லட்சம் ரூபாய் கடனுக்கான தவணைகளைச் செலுத்த முடியாமல் தவித்ததால், கடனை அடைப்பதற்காகவே இந்த நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டெல்லியில் நகைகளை விற்க முயன்ற திக்விஜய் சிங்கைக் கைது செய்ததுடன், கொள்ளையடிக்கப்பட்ட பெரும்பாலான நகைகளையும் அவரிடமிருந்து பத்திரமாக மீட்டுள்ளனர். தற்போது இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
