LATEST NEWS
டேய் குடுத்துருடா பிளீஸ்..! குரங்கு கையில் சிக்கிய ரூ.81,800 பென்சன் பணம்… மரத்திலிருந்து பொழிந்த பணமழை… அரசு அலுவலகத்திலேயே கைவரிசை காட்டிய சம்பவம்..!!
இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில், ஊழியர் ஒருவர் வங்கியில் செலுத்துவதற்காக ரூ.81,800 பென்சன் பணத்தை பையில் எடுத்துச் சென்றார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று, அவரிடமிருந்த பணப்பையைப் பறித்துக்கொண்டு மரத்தின் மீது ஏறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், தனது பணத்தை மீட்டுத் தருமாறு அங்கிருந்த உள்ளூர் மக்களின் உதவியை நாடினார். உடனடியாக பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து மரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கை ஓசை எழுப்பி விரட்ட முயன்றனர்.
மக்களின் சத்தத்தைக் கேட்ட குரங்கு, தான் வைத்திருந்த பணப்பையைக் கீழே வீசியதில் சுமார் ரூ.80,300 பணம் மட்டும் சிதறி விழுந்தது. பொதுமக்கள் அந்தப் பணத்தைச் சேகரித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த நிலையில், மீதமுள்ள ரூ.1,500 பணம் கிடைக்கவில்லை.
அரசு வளாகத்திற்குள்ளேயே நடைபெற்ற இந்தச் சம்பவம், சிம்லா பகுதியில் குரங்குகளின் தொல்லை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காட்டுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
