திருப்பூரில் பதற்றம்…!! நடந்து சென்ற சிறுமியின் வாயைப் பொத்தி கடத்திச் சென்று வன்கொடுமை செய்த நபர் கைது…!! – cinefeeds
Connect with us

CRIME

திருப்பூரில் பதற்றம்…!! நடந்து சென்ற சிறுமியின் வாயைப் பொத்தி கடத்திச் சென்று வன்கொடுமை செய்த நபர் கைது…!!

Published

on

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அம்மிக்கல் விற்பனை செய்யும் தொழிலாளி விஷ்ணு (26) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் நடந்து சென்ற சிறுமியின் வாயைப் பொத்தி காட்டுப்பகுதி மற்றும் மறைவான இடத்திற்கு கடத்திச் சென்ற அவர், மயக்க மருந்து கொடுத்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

மயக்கம் தெளிந்த சிறுமி நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பெற்றோரின் புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் தேடுவதை அறிந்த விஷ்ணு தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது.

Advertisement

இதையடுத்து விஷ்ணுவை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவரை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்த நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in