“என் தங்கச்சி செத்தது இவனாலதான்…” தனியார் ஊழியரை சரமாரியாக வெட்டிப் பழிதீர்த்த அண்ணன்..! காஞ்சிபுரத்தில் நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் தங்கச்சி செத்தது இவனாலதான்…” தனியார் ஊழியரை சரமாரியாக வெட்டிப் பழிதீர்த்த அண்ணன்..! காஞ்சிபுரத்தில் நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!!

Published

on

காஞ்சிபுரம் தாலுகா செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் மீரான் (வயது 28). ஏற்கனவே திருமணம் ஆன இவர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

திடீரென இருவரும் குடும்பத்தினரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதையடுத்து இருதரப்பு குடும்பத்தினரும் அவர்களை தேடி கண்டுபிடித்து மீரான் மற்றும் சவுந்தர்யாவை பிரித்து வைத்தனர். இதனால் விரக்தி அடைந்த சவுந்தர்யா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

சகோதரி உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த சவுந்தர்யாவின் சகோதரர் நந்தகுமார் (25), காஞ்சிபுரத்தை அடுத்த கோளிவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த மீரானை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தனது தங்கையின் சாவுக்கு காரணமான மீரானை வெட்டிக்கொன்று பழிதீர்த்து கொண்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in