LATEST NEWS
பெரும் பயங்கரம்..! பாகிஸ்தானில் அரங்கேறிய கொடூரம்… இந்து சிறுமியைச் சீரழித்து கிரிக்கெட் மைதானத்தில் வீசிய கும்பல்..!!
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் சுஜாவல் பகுதியில், இளம் இந்து சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, அந்தச் சிறுமியை அருகிலுள்ள கிரிக்கெட் மைதானத்தில் வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்து சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவதும், கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய கொடூரச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
