CINEMA
“உடைந்து போனதா ‘DnA’ கூட்டணி..?” அனிருத்தின் ஒரே ஒரு பதிவால் கோலிவுட்டில் வெடித்த புதிய சர்ச்சை.. இணையத்தில் கொந்தளித்த தனுஷ் ரசிகர்கள்..!!
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள அனிருத் ரவிச்சந்தர், ‘ஜவான்’ மூலம் 1000 கோடி கிளப்பிலும், ‘லியோ’, ‘ஜெயிலர்’, ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்கள் மூலம் 500 கோடி வசூல் பட்டியலிலும் இடம்பிடித்துத் தனது இசை ஆளுமையை நிரூபித்துள்ளார். இளம் தலைமுறையினரின் நாடித்துடிப்பை அறிந்து இசையமைக்கும் அனிருத், சினிமாவில் தனது 15 ஆண்டுகால இசைப்பயணத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு சமூக வலைதளத்தில் நன்றிப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், 2011-ல் வெளியான ‘3’ திரைப்படத்தின் ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் மூலம் தன்னை உலகறியச் செய்த நடிகர் தனுஷின் பெயரை அந்தப் பதிவில் ஒரு இடத்தில் கூட அனிருத் குறிப்பிடாதது, தனுஷ் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அனிருத்தை சிங்கப்பூருக்குப் படிக்க அனுப்ப அவரது பெற்றோர் முடிவெடுத்தபோது, “அவரிடம் அபாரத் திறமை இருக்கிறது” என நம்பிக்கை தெரிவித்து, கீ-போர்ட் வாங்கிக் கொடுத்தது முதல் ‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது வரை அனைத்திற்கும் முழுக்காரணம் தனுஷ்தான் என இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முன்பு அளித்த பேட்டியின் வீடியோவைப் பகிர்ந்து ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், அனிருத் தனது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்குக் கூட தனுஷை அழைக்கவில்லை என்ற தகவலும் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘3’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’, ‘திருச்சிற்றம்பலம்’ என 5 பிளாக்பஸ்டர் ஆல்பங்களைக் கொடுத்த ‘DnA’ கூட்டணிக்கு இடையே அப்படி என்னதான் விரிசல் விழுந்தது என்ற கேள்வி தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.
