அன்று ஒரு தோசைக்காக ஏங்கிய சிறுமி.. இன்று அதே 5-ஸ்டார் ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியராக மாஸ் என்ட்ரி.. கண்கலங்க வைக்கும் கதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அன்று ஒரு தோசைக்காக ஏங்கிய சிறுமி.. இன்று அதே 5-ஸ்டார் ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியராக மாஸ் என்ட்ரி.. கண்கலங்க வைக்கும் கதை..!!

Published

on

கிழிந்த வேட்டி மற்றும் சட்டையுடன் ஏழ்மையான தோற்றத்தில் இருந்த தந்தை ஒருவர், தனது 15 வயது மகளுடன் நகரின் மிகப்பெரிய ஐந்து நட்சத்திர உணவகத்திற்குள் நுழைந்தார். அவர்கள் அமர்ந்ததும், பணியாளர் ஒருவர் வந்து தண்ணீர் மற்றும் உணவுப் பட்டியலைக் கொடுத்தார். அப்போது அந்தத் தந்தை, “பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்தால், இந்தப் பெரிய 5-ஸ்டார் ஹோட்டலில் தோசை வாங்கித் தருவதாக என் மகளுக்கு வாக்குக் கொடுத்திருந்தேன்; அவளும் சாதித்துவிட்டாள். அவளுக்கு ஒரு தோசை கொண்டு வாருங்கள்” என்றார். உடனே அந்தப் பணியாளர், “உங்களுக்கு என்ன வேண்டும் ஐயா?” என்று கேட்டதற்கு, “என்னிடம் ஒரு தோசைக்கு மட்டுமே பணம் இருக்கிறது” என்று அந்தத் தந்தை தயக்கத்துடன் பதிலளித்தார்.

இதைக் கேட்டு நெகிழ்ந்து போன அந்தப் பணியாளர், நேராக உணவகத்தின் உரிமையாளரிடம் சென்று நடந்ததை விவரித்து, “இவர்கள் இருவருக்கும் என் சம்பளத்திலிருந்து பணத்தைப் பிடித்துக்கொண்டு வயிறார காலை உணவு வழங்க விரும்புகிறேன்” என்றார். பணியாளரின் மனிதநேயத்தைக் கண்டு வியந்த உரிமையாளர், “அதற்கெல்லாம் அவசியமில்லை; இந்த ஏழை மாணவியின் வெற்றியை நாமே கொண்டாடுவோம்” என்று கூறி, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து அந்த மாணவிக்குச் சிறப்பான விருந்தளித்துக் கௌரவித்தார். அந்த அன்பான உபசரிப்பை மனதில் சுமந்தபடி தந்தையும் மகளும் அங்கிருந்து விடைபெற்றனர்.

Advertisement

காலங்கள் உருண்டோட, கடினமாக உழைத்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற அந்த மாணவி, அதே நகரத்தின் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார். பதவியேற்றதும், அந்த 5-ஸ்டார் உணவகத்திற்குத் தான் காலை உணவிற்கு வருவதாகத் தகவல் அனுப்பினார். ஆட்சியரின் வருகைக்காக உணவகமே விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், தனது தந்தையுடன் புன்னகைத்தபடி உள்ளே நுழைந்த ஆட்சியரை அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். உணவக உரிமையாளரையும் அந்தப் பணியாளரையும் பார்த்து நெகிழ்ந்த ஆட்சியர், “என்னை அடையாளம் தெரிகிறதா? அன்று இரண்டாவது தோசைக்குக் கூடப் பணமில்லாமல் வந்த சிறுமியின் வெற்றியைக் கொண்டாடி மனிதநேயத்தைக் காட்டிய உங்களால்தான் நான் இன்று ஆட்சியராக நிற்கிறேன். உங்கள் அன்பை நான் என்றும் மறக்க மாட்டேன்; இன்று இங்குள்ள அனைவருக்குமான விருந்து என்னுடையது” என்று கூறி நன்றிக்கடன் செலுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in