எப்பா..! “தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூட போடாதீங்க” சினிமா கவர்ச்சி அரசியலைக் கெடுத்துவிட்டது… சேலத்தில் தனியரசு ஆவேசம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எப்பா..! “தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூட போடாதீங்க” சினிமா கவர்ச்சி அரசியலைக் கெடுத்துவிட்டது… சேலத்தில் தனியரசு ஆவேசம்..!!

Published

on

சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய தமிழக கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

சினிமா கவர்ச்சி தமிழக அரசியலைக் கெடுத்துவிட்டதாக விமர்சித்த அவர், இனி சினிமா கவர்ச்சியை மட்டும் நம்பி அரசியலுக்கு வரும் தனுஷ், திரிஷா உள்ளிட்ட யாருக்கும் மக்கள் ஒரு வாக்கு கூடப் போடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

மேலும், சினிமாவில் நடித்தவர்களே தமிழகத்தின் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பது தமிழர் மாண்புக்கு இழுக்கு என்றும் தனியரசு கடுமையாகச் சாடியுள்ளார். அவரது இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in