“உயிரோடு இருந்தப்போ வாழவிடல… செத்ததுக்கப்புறமாவது இங்கயே இருக்கட்டும்..” கணவன் வீட்டு வாசலிலேயே உடலை வைத்து இறுதிச் சடங்கு செய்த உறவினர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உயிரோடு இருந்தப்போ வாழவிடல… செத்ததுக்கப்புறமாவது இங்கயே இருக்கட்டும்..” கணவன் வீட்டு வாசலிலேயே உடலை வைத்து இறுதிச் சடங்கு செய்த உறவினர்கள்..!!

Published

on

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள சதர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட முகமதுபூர் பதாஹி கிராமத்தில், விபா தாக்கூர் (35) என்ற திருமணமான பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர் கணவனின் வீட்டிற்குச் சென்று வீட்டின் முக்கிய வாசலிலேயே அவரது உடலை வைத்து இறுதிச் சடங்கு செய்தனர். உயிருடன் இருந்தபோது மகளுக்கு மருமகன் வீட்டில் உரிய இடமும் மரியாதையும் கிடைக்கவில்லை என்பதால், மரணத்திற்குப் பின்னரும் அவளது உடல் அதே வாசலில் இருக்க வேண்டும் என்று கூறி மைத்துனர் மற்றும் குடும்பத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

உயிரிழந்த விபா தாக்கூருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சந்தன் தாக்கூர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமாகி சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே தகராறு தொடங்கியதாகவும், கர்ப்பமாக இருந்தபோதும் கருக்கலைப்பு செய்யுமாறு கணவரும் குடும்பத்தினரும் அழுத்தம் கொடுத்ததாகவும் விபாவின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், டிசம்பர் 12 ஆம் தேதி இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு வரவிருந்தது. இதற்கிடையே, கடந்த சத் பூஜை திருவிழாவின் போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட விபாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்; அங்கு அவரது கல்லீரலும் சிறுநீரகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Advertisement

விபாவின் திடீர் மரணத்திற்குப் பிறகு கணவனும் அவரது குடும்பத்தினரும் உணவில் விஷம் கலந்து கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல் சொந்தக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அவர்கள் உடலை நேராக கணவனின் வீட்டிற்கு எடுத்துச் சென்று வாசலிலேயே சிதை மூட்டி இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர். இதனிடையே, இறந்த பெண்ணின் தந்தை பச்சு சௌத்ரி அளித்த புகாரின் அடிப்படையில், கணவன் சந்தன் தாக்கூர், மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யப் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in