திடீர் திருப்பம்..! செஞ்சி சிறுமி வழக்கில் 37 நாட்களாக நீடிக்கும் மர்மம்… செங்கல் சூளை சாம்பல் பரிசோதனையில் வெளிவரப்போகும் பகீர் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

திடீர் திருப்பம்..! செஞ்சி சிறுமி வழக்கில் 37 நாட்களாக நீடிக்கும் மர்மம்… செங்கல் சூளை சாம்பல் பரிசோதனையில் வெளிவரப்போகும் பகீர் உண்மை..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், அவரது வீட்டிற்கு எதிரே உள்ள செங்கல் சூளையில் சேகரிக்கப்பட்ட சாம்பல் மாதிரிகளின் தடயவியல் அறிக்கை இன்று சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி மறுநாள் அதிகாலை காணாமல் போனதைத் தொடர்ந்து, அந்தச் செங்கல் சூளையின் சாம்பல் மற்றும் மண் மாதிரிகள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த அறிக்கையில் மனித எலும்புத் துகள்கள் உள்ளதா என்பது தெரியவரும் என்றும், இல்லை எனில் சிறுமி கடத்தப்பட்ட கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

இந்த வழக்கில் சென்னை சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் சிறுமியின் பெற்றோரிடம் தனித்தனியாக 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார். சுமார் 37 நாட்களாக நீடிக்கும் இந்த விசாரணையில் 4 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்றைய தடயவியல் அறிக்கை வழக்கின் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in