LATEST NEWS
“என் வாட்ச் விலை ₹47 லட்சமா?”கைக்கடிகாரத்தால் வெடித்த சர்ச்சை… உண்மையைப் போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்..!
அமைச்சர் ராஜ்மோகன் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் விலை ₹47 லட்சம் எனச் சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் அணிந்திருக்கும் வாட்ச்சின் உண்மையான விலை வெறும் ₹5,500 மட்டுமே என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தனது நிறம், உடை மற்றும் அணிகலன்களைக் குறிப்பிட்டுத் திட்டமிட்டுப் பொய்யான தகவல்களைப் பரப்பி இழிவுபடுத்துவது ஒருபோதும் ஏற்புடையதல்ல என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் தன்னைக் குறிவைத்து இவ்வாறு அவதூறு பரப்பும் செயல்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மைக்குப் புறம்பான இத்தகைய வதந்திகளையும் அவதூறுகளையும் தொடர்ந்து பரப்பி வரும் ‘போலி செய்தித் தொழிற்சாலைகள்’ கூட்டத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
