மருத்துவர்களையே அதிரவைத்த சம்பவம்..! 19 வயது இளம்பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்… டிஎன்ஏ டெஸ்டில் காத்திருந்த பேரதிர்ச்சி.. பின்னணி என்ன..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

மருத்துவர்களையே அதிரவைத்த சம்பவம்..! 19 வயது இளம்பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்… டிஎன்ஏ டெஸ்டில் காத்திருந்த பேரதிர்ச்சி.. பின்னணி என்ன..?

Published

on

ஒரு தாய் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தையர்கள் இருப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு, பிரேசிலில் நடந்த மிகவும் ஆச்சரியமான சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. பிரேசிலைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில், அந்த இரண்டு குழந்தைகளுக்கும் வெவ்வேறு உயிரியல் தந்தையர்கள் இருப்பது டிஎன்ஏ (DNA) பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண், இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே நபர்தான் தந்தை என்று நினைத்திருந்த நிலையில், இங்கிலாந்தில் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் அவர் ஒரு குழந்தைக்கு மட்டுமே உயிரியல் தந்தை என்பது உறுதியானது. இதையடுத்து, அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவர்தான் இரண்டாவது குழந்தையின் தந்தை என்பது கண்டறியப்பட்டு மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

மருத்துவ அறிவியலில் இந்த மிக அரிதான நிகழ்வு ‘ஹெட்டோரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன்’ (Heteropaternal Superfecundation) என்று அழைக்கப்படுகிறது. ஒரே மாதவிடாய் சுழற்சியின் போது பெண்ணின் கருப்பையில் வெளியாகும் இரண்டு தனித்தனி கருமுட்டைகள், குறுகிய கால இடைவெளியில் இரண்டு வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்களால் கருவுறும்போது இத்தகைய அபூர்வ இரட்டைக் குழந்தைகள் உருவாகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in