“வீட்டு வாசலிலேயே காத்திருந்த எமன்..!” 20 நிமிடங்கள் சாக்கடையில் உயிருக்குப் போராடிய தொழிலதிபர்.. வெளியானது பகீர் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“வீட்டு வாசலிலேயே காத்திருந்த எமன்..!” 20 நிமிடங்கள் சாக்கடையில் உயிருக்குப் போராடிய தொழிலதிபர்.. வெளியானது பகீர் சிசிடிவி காட்சி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி, ஷியாம்நகர் பகுதியில், 45 வயதான இனிப்புக் கடை உரிமையாளர் ஹரிசங்கர் பாஜ்பாய் தனது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது, எதிர்பாராத விதமாக அருகிலிருந்த திறந்தவெளிச் சாக்கடையில் தவறி விழுந்தார். சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக அவர் சாக்கடைக்குள் முகம் குப்புறக் கிடந்து உயிருக்குப் போராடியதாகவும், ஆனால் அவரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

சந்தைக்குச் சென்றிருந்த அவரது மனைவி நீலம் மற்றும் மகள் பாரி ஆகியோர் வீடு திரும்பியபோது, ஹரிசங்கர் சாக்கடையில் மூழ்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திறந்தவெளிச் சாக்கடைகளை மூடாமல் அலட்சியமாகச் செயல்பட்ட மாநகராட்சி நிர்வாகமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனக் குடும்பத்தினர் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in