“இந்த சமூகம் என்ன சொல்லுமோ..?” அந்த ஒரு விஷயத்துக்கு பயந்து… பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்… 21 வயது தாயும் கைது..!! – cinefeeds
Connect with us

CRIME

“இந்த சமூகம் என்ன சொல்லுமோ..?” அந்த ஒரு விஷயத்துக்கு பயந்து… பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்… 21 வயது தாயும் கைது..!!

Published

on

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் தெஹ்காம் அருகே, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையைக் கொலை செய்த சம்பவத்தில், குழந்தையின் தாயான 21 வயது இளம்பெண்ணும் அவரது 32 வயது காதலனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள குழி ஒன்றில் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையில், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த கல்பனா சோலங்கி என்ற 21 வயது இளம்பெண்ணுக்கும், 32 வயதுடைய கால்ஜி சோலங்கி என்பவருக்கும் இடையே திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கர்ப்பமடைந்த கல்பனாவுக்கு, கடந்த நவம்பர் 14-ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்த விஷயம் வெளியில் தெரிந்தால் சமூகத்தில் அவமானம் ஏற்படும் என இருவரும் அஞ்சியுள்ளனர்.

Advertisement

இதனால் குழந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்ட காதலன் கால்ஜி சோலங்கி, பிறந்து சில மணி நேரமே ஆன அந்தப் பெண் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்று, அருகிலுள்ள குழியில் வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் செயல் குறித்து வழக்குப் பதிவு செய்த தெஹ்காம் போலீசார், கல்பனா சோலங்கி மற்றும் கால்ஜி சோலங்கி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in