அடக்கொடுமையே.. டெல்லியில் ரூ.15 சமோசா சாப்பிட்ட ரஷ்யப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… மருத்துவமனைக்கு ஓட வைத்த அந்த ஒரு விஷயம்.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே.. டெல்லியில் ரூ.15 சமோசா சாப்பிட்ட ரஷ்யப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… மருத்துவமனைக்கு ஓட வைத்த அந்த ஒரு விஷயம்.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த ரஷ்யப் பெண் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியதும் பசியாற்றுவதற்காக அருகிலிருந்த கடையில் ரூ.15 கொடுத்து சமோசா ஒன்றை வாங்கியுள்ளார். அந்த சமோசாவிலோ அல்லது அதன் விலையிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை; ஆனால், அந்த சமோசாவைச் சுற்றிக் கொடுத்த செய்தித்தாளில் இருந்த அச்சு மை அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நேரத்திலேயே அவரது உடலில் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றியதுடன், சருமத்தில் கடுமையான எரிச்சலும் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை மோசமடைவதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்; அங்கு மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கியதால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. உணவுப் பொருட்களைச் செய்தித்தாள்களில் சுற்றித் தருவதால் ஏற்படும் ஆபத்தை இந்தச் சம்பவம் அந்தப் பெண்ணுக்கு உணர்த்தியதோடு, செய்தித்தாள் மையில் உள்ள ரசாயனங்கள் உணவுடன் கலப்பதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்த விழிப்புணர்வையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in