“நகைக்காக இப்படியொரு கொடூரமா..?” பெற்ற தாயையே கொன்றுவிட்டுக் கொள்ளை நாடகமாடிய மகள்.. போலீஸ் விசாரணையில் உடைந்த பகீர் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“நகைக்காக இப்படியொரு கொடூரமா..?” பெற்ற தாயையே கொன்றுவிட்டுக் கொள்ளை நாடகமாடிய மகள்.. போலீஸ் விசாரணையில் உடைந்த பகீர் உண்மை..!!

Published

on

ராணிப்பேட்டையில் சொந்தத் தாயையே கொலை செய்துவிட்டு, மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக நாடகமாடிய மகளை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நகை தொடர்பாகத் தாய்க்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த மகள் தனது தாயைக் கொலை செய்துவிட்டு, போலீசாரின் விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கில் கொள்ளைச் சம்பவம் போல் ஜோடித்துள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த காவல்துறையினர், வீட்டில் இருந்த தடயங்கள் மற்றும் மகளின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், மகளே தாயைக் கொலை செய்துவிட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய அதிர்ச்சி உண்மை அம்பலமானதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in