LATEST NEWS
“CM சார் உங்களுக்கு கொஞ்சம் கூட உறுத்தலையா..?” அன்னைக்கு வாய்கிழிய பேசுனீங்களே… முதல்வர் விஜய்யை கிழித்தெடுத்த கனிமொழி..!!
தூத்துக்குடியில் 11-ம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய்யை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கொலைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் நேரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து வாய்க்கிழியப் பேசிய முதலமைச்சர் விஜய்க்கு, இதுபோன்ற சம்பவங்கள் கொஞ்சம் கூட உறுத்தவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், பெண்கள் பாதுகாப்பிற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் படை’ எங்கே போய் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கனிமொழி தனது அறிக்கையில் காட்டமாகச் சாடியுள்ளார்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், கனிமொழி எம்.பி-யின் இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
