“ஒரு தொண்டன் முடிவு எடுத்துவிட்டால்…” இபிஎஸ்-க்கு எஸ்.பி.வேலுமணி விடுத்த நேரடி எச்சரிக்கை.. அதிமுக-வில் உச்சக்கட்டத்தை எட்டிய உட்கட்சிப் போர்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒரு தொண்டன் முடிவு எடுத்துவிட்டால்…” இபிஎஸ்-க்கு எஸ்.பி.வேலுமணி விடுத்த நேரடி எச்சரிக்கை.. அதிமுக-வில் உச்சக்கட்டத்தை எட்டிய உட்கட்சிப் போர்…!!!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார். கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களில் வேலுமணியும் ஒருவர். இதில் தனி நபர் கருத்து என்பதெல்லாம் கிடையாது; அவர் பேச்சை வைத்துக்கொண்டு என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்” எனக் காட்டமாகப் பதிலளித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக எஸ்.பி.வேலுமணி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், “அதிமுகவில் உள்ள இரண்டு கோடித் தொண்டர்களால்தான் நீங்கள் இன்று பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள். ஒரு தொண்டன் முடிவு எடுத்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பிரிந்து சென்றவர்களை இணைப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு இடையிலான மோதல் போக்கு தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in