LATEST NEWS
“கொளத்தூரில் இடைத்தேர்தல் வேண்டாம்” ஸ்டாலினை MLA-வாக அறிவிக்க வேண்டும்… வேல்முருகன் பேச்சால் தமிழக அரசியலில் புது பரபரப்பு..!!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாகியுள்ளது.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய வேல்முருகன், ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்தாலோ அல்லது பதவியை இழந்தாலோ, தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு அந்தப் பதவியை வழங்குவதே சிறந்த யோசனையாக இருக்கும் என்று குறிப்பிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், 74,202 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த மு.க. ஸ்டாலினுக்கே இடைத்தேர்தல் இன்றி அத்தொகுதியை வழங்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக அமைந்துள்ளது.
மேலும், தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையாக விமர்சித்த வேல்முருகன், மாநிலத்தில் நாளுக்கு நாள் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாகத் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தனது பேச்சில் சாடியுள்ளார்.
