குடித்துவிட்டுத் தினமும் டார்ச்சர் செய்த கணவன்… அசந்து தூங்கும் பொது தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொ**ற மனைவி… நள்ளிரவில் திருச்சியில் நடந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

குடித்துவிட்டுத் தினமும் டார்ச்சர் செய்த கணவன்… அசந்து தூங்கும் பொது தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொ**ற மனைவி… நள்ளிரவில் திருச்சியில் நடந்த கொடூரம்..!!

Published

on

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில், குடும்பப் பிரச்சினை காரணமாக இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த கணவரின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு அவரது மனைவி கொலை செய்தார். கூலித் தொழிலாளியான செந்தில்குமார் (50) மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால், அவருக்கும் மனைவி கலாராணிக்கும் (42) இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த நேற்று இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், செந்தில்குமார் தூங்கிய பிறகு வீட்டிலிருந்த அம்மிக்கல்லைத் தூக்கி அவரது தலையில் போட்டு கலாராணி கொலை செய்தார்.

Advertisement

தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மனைவி கலாராணியைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சிறுவர்கள் உள்ள குடும்பத்தில் நடந்த இந்தப் பயங்கரச் சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in