வயிற்றில் எட்டி உதைத்ததில் வெடித்த கிட்னி… பிரேதப் பரிசோதனையில் சிக்கிய உண்மை… சாதாரண வாக்குவாதம் கொ**யில் முடிந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

வயிற்றில் எட்டி உதைத்ததில் வெடித்த கிட்னி… பிரேதப் பரிசோதனையில் சிக்கிய உண்மை… சாதாரண வாக்குவாதம் கொ**யில் முடிந்த கொடூரம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள கர்ரா கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான ரமேஷ் என்பவர், நவம்பர் 20 அன்று ஏற்பட்ட சாதாரண தகராறில் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் தற்போது முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது வயிற்றில் பலமாக உதைக்கப்பட்டதால் சிறுநீரகம் (கிட்னி) வெடித்து உயிரிழப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த ரேக்லால் ரோக்டே (44) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்தபோது, மதுபோதையில் ரமேஷ் தகாத வார்த்தைகளால் பேசியதால் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் வயிற்றில் உதைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது பிஎன்எஸ் (BNS) 103(1) பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in