BREAKING: தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்றால்… நடவடிக்கை கடுமையாக இருக்கும் – நீதிபதிகள் எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்றால்… நடவடிக்கை கடுமையாக இருக்கும் – நீதிபதிகள் எச்சரிக்கை..!!

Published

on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றாவிட்டால் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. ஆனால், சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் காட்டி மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 தடை உத்தரவு (BNSS பிரிவு 163) பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையின்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் காவல் துணை ஆணையர் இனிகோ ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

Advertisement

அப்போது நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவு மக்களின் மத உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது எல்லாவற்றையும் சீர்குலைத்துவிடும் என்றும் அதிருப்தி தெரிவித்தது. கடந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் இருக்க என்ன நடந்ததோ, அதேபோன்ற சூழல் தற்போதும் உருவாக்கப்படுவதாகவும், கடந்த ஆண்டு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி இனிகோதான் தற்போதும் உள்ளார் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து தீபத்தூணில் தீபம் ஏற்றாவிட்டால் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in