“என் அப்பா, அம்மா பெயர் இதில் வரவேண்டாம்…” உயிருக்குப் போராடியபடி 17 வயது சிறுவன் பேசிய உருக்கமான வீடியோ.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் அப்பா, அம்மா பெயர் இதில் வரவேண்டாம்…” உயிருக்குப் போராடியபடி 17 வயது சிறுவன் பேசிய உருக்கமான வீடியோ.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறிய வார்த்தையால் மனமுடைந்த 17 வயது சிறுவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், “இந்த வழக்கில் என் பெற்றோரின் பெயர் வரக்கூடாது” என அவன் உருக்கமாகப் பேசும் வீடியோ வெளியாகிப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹ்ரைச் மாவட்டத்தின் முர்திஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கங்காபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதான சந்தன் மௌரியா. குடும்ப உறுப்பினர் ஒருவர் பேசிய வார்த்தையால் கடுமையான மனவேதனை அடைந்த சந்தன், வீட்டிலிருந்த விஷத்தைக் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவனது உடல்நிலை மோசமடைந்ததைக் கண்டு பதறிப்போன குடும்பத்தினர், உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி சந்தன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Advertisement

இச்சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சந்தன் மௌரியா தனது அத்தையிடம் (Maternal aunt), இந்த விவகாரத்தில் தனது பெற்றோரின் பெயர் எக்காரணம் கொண்டும் சிக்கக்கூடாது என உருக்கமாகக் கூறுவது பதிவாகியுள்ளது. இதற்கிடையே, சிறுவனின் மரணம் குறித்துக் குடும்பத்தினர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை எனப் பஹ்ரைச் காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in