LATEST NEWS
பைக்கில் கன்றுக்குட்டியை ஏற்றிச் சென்ற இளைஞர்கள்… பதற்றத்துடன் பின்னால் ஓடிய தாய்ப்பசு.. விசாரணையில் வெளியான நெகிழ்ச்சி உண்மை – இணையத்தில் வைரல் வீடியோ..!!
டெல்லி ஓக்லா பகுதியில் உள்ள அபுல் ஃபசல் என்கிளேவ் தெருக்களில், இருசக்கர வாகனத்தில் கன்றுக்குட்டியை ஏற்றிச் சென்ற இரண்டு இளைஞர்களைத் தாய்ப்பசு ஒன்று பதற்றத்துடன் துரத்திச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கன்றுக்குட்டி கடத்தப்படுவதாகக் கருதிய அப்பகுதி மக்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தி கன்றுக்குட்டியை மீட்குமாறு காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தென்கிழக்கு டெல்லி துணைக் காவல் ஆணையர் அலுவலகம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளது. அதில், வீடியோவில் கன்றுக்குட்டியை பைக்கில் ஏற்றிச் சென்றது மாட்டின் உரிமையாளரின் மகன்தான் என்றும், சுமார் 3 மாதங்களே ஆன அந்தக் கன்றுக்குட்டியால் நடக்க முடியாத காரணத்தால், அதனைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்லவே அவர் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாய்ப்பசுவும் கன்றுக்குட்டியும் தற்போது பாதுகாப்பாக ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறை, இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை உறுதிப்படுத்திய பிறகே செய்திகளைப் பகிருமாறும் பொதுமக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
