LATEST NEWS
BREAKING : தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு…!!
மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், இந்த புதிய மசோதா குறித்த திமுகவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த மசோதாவின் கீழ், பாரபட்சமின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீதத் தொகுதிகள் உயர்வு வழங்கப்படுவதால், இதனை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக திமுக எம்.பி. ஆ. ராசா விளக்கமளித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கும் உரிய விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்பதால் திமுக இந்த முடிவை எடுத்துள்ளது.
