LATEST NEWS
“இந்திய வீரர்களை மீட்டதே பிரபாகரன்தான்..” சீமானின் பேச்சால் சமூக வலைதளங்களில் வெடித்த விவாதம்..!!
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்துப் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரபாகரனைக் கொல்ல இந்தியா சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்களை அனுப்பியதாகவும், ஆனால் வெறும் 500 வீரர்களைக் கொண்டே இந்திய ராணுவத்தை அவர் தோற்கடித்ததாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போர்க்களத்தில் கைவிடப்பட்டிருந்த 500 இந்திய ராணுவ வீரர்களைப் பாதுகாப்பாகப் படகு மூலம் ராமேஸ்வரத்தில் கொண்டுபோய் இறக்கிவிட பிரபாகரன் உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தினரையே பிரபாகரன் மீட்டதாக சீமான் முன்வைத்துள்ள இந்தக் கருத்து குறித்துப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
