LATEST NEWS
விஜய் சேதுபதியை தொடர்ந்து தொகுப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஆண்டு இளம் நடிகர்கள் பலரும் அறிமுகமாகி வருகின்றனர். இப்படி அறிமுகமாகும் அனைவரத்து திரியாபப்டங்களும் வெற்றி பெற்று பெரும் புகழும் அவர்களுக்கு கிடைப்பதில்லை ஆனால் சிலருக்கு வெற்றியடைந்தால் கூட அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவதில்லை. இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக பல இளம் நடிகர்களும் கலக்கி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உச்ச நட்சத்திரங்களுடனே போட்டிபோடும் அளவுக்கு அவர்களது திரைப்படங்களும் வசூலை குவித்து வருகிறது.
இப்படி தொலைக்காட்சிகளிலும், குறும்படங்களிலும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பின்னர் தனது திறமையினால் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத கதாநாயகனாக தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. முன்பெல்லாம் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள் தான் டிவி பக்கம் செல்வார்கள்.ஆனால், போகப் போக அந்த நிலை மாறியது. கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால், விஜய் சேதுபதி என பலரும் டிவி பக்கம் பெரிய ஷோக்களை தொகுத்து வழங்கினார்கள்.
விஜய் சேதுபதி அடுத்தாக ‘மாஸ்டர் செப்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியை கன்னடத்தில் ‘நான் ஈ’ சுதீப்பும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள். தமன்னா இதுவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதில்லை.முதல் முறையாக இந்த ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார்.
