LATEST NEWS
கல்லூரி அதிபர் மீது பலாத்காரப் பழி..! வாட்ஸ்அப் சாட்டிங் கொடுத்த ட்விஸ்ட்… காதலன் செய்த செயலால் நர்சிங் மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த கொடூரம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் நர்சிங் படித்து வந்த மாணவி பிரீத்தி, ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மரணம் தொடர்பாக, மாணவியின் குடும்பத்தினர் கல்லூரி உரிமையாளரின் மகன் யக்ஷ் தக்ஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவர் பிரீத்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, கொலை செய்து உடலை ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டதாகக் கூறி குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த காவல்துறையினர் கல்லூரி வளாகத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பிரீத்தி நள்ளிரவில் தனியாக விடுதியின் சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்து வெளியேறி, ரயில் தண்டவாளம் நோக்கிச் சென்றது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அவரது மொபைல் போன் அழைப்பு விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களைப் போலீஸார் விரிவாக ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் முடிவில், பிரீத்திக்கும் அவரது காதலன் அமன் என்பவருக்கும் இடையே கடந்த அக்டோபர் 27 அன்று இரவு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த காதலன் அமன், பிரீத்தியின் அலைபேசி எண்ணை வாட்ஸ்அப் மற்றும் சாதாரண அழைப்புகளில் ‘பிளாக்’ செய்துள்ளார். இதனால் கடும் மனமுடைந்த பிரீத்தி, இரவோடு இரவாகத் தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்பது வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் உறுதியானதால், தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காகக் காதலன் அமனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
