CRIME
நெஞ்சே நடுங்குது..! சக ஆசிரியையை கொலை செய்து.. 8 மணி நேரம் சடலத்துடன் பள்ளி மேலாளர் செய்த காரியம்… கார் டிக்கிக்குள் காத்திருந்த பயங்கரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியாவில், 27 வயதான பள்ளி ஆசிரியை ராணி விஸ்வகர்மா என்பவர் அவரது காதலனும், பள்ளி மேலாளருமான விஜய் நிஷாத் என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமணமான விஜய் நிஷாத்திற்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறும், இல்லையெனில் தங்களது உறவு குறித்து அனைவருக்கும் தெரிவித்துவிடுவேன் என்றும் ராணி தொடர்ந்து விஜய்க்கு அழுத்தம் கொடுத்து மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய், காரிலேயே வைத்து ராணியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பிறகு, ஆதாரங்களை மறைப்பதற்காக ராணியின் உடலைக் காரின் டிக்கியில் (Trunk) மறைத்து வைத்துள்ளார் விஜய். உடலுடன் சுமார் 8 மணி நேரம் காரிலேயே பல்வேறு இடங்களுக்குச் சுற்றி வந்துள்ளார். இந்த பயணத்தின் போது, கொலையை மறைப்பதற்காக ராணியின் மொபைல் போன், அதன் கவர் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை காரில் இருந்து வழியிலேயே தூக்கி வீசியுள்ளார்.
அன்று இரவு சுமார் 8 மணியளவில், தான் பணிபுரியும் பள்ளிக்கு அருகிலேயே ராணியின் உடலைத் தூக்கி வீசிவிட்டு விஜய் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட பள்ளி மேலாளர் விஜய் நிஷாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
